நான் ஒரு சனாதனி; வள்ளலார் சிலையை திறந்து வைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 03:10
சென்னை: என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளலார் திருவுருச்சிலையை கவர்னர் ரவி திறந்து வைத்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனத்தின் வெளிப்பாடு. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
உலகத்திற்கு முக்கியம்: முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திருவருட்பிரகாச வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டும் அவரது செய்தி ஒரு நிலையான உலகத்திற்கு முக்கியமானது. அவரது ஒளி நம் தேசம் பெருமை அடைய வழிகாட்டட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.