அழகுநாச்சியம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 04:10
பழையனூர்: பழையனூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடந்தது. பழையனூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்துவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி முளைப்பாரி திண்ணை அருகே பெண்கள் மழை வேண்டி அம்மன் பாடல்களை பாடி கும்மி அடித்தனர். எட்டாம் நாளான நேற்று முளைப்பாரி திண்ணையில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து அழகுநாச்சியம்மன் கோயில், கண்மாய்கரை, சந்தனகருப்பு கோயில், முருகன் கோயில், நவநீத பெருமாள் கோயில், மார்கண்டேய கோயில் வழியாக ஊர்வலமாக சென்று பழையனூர் கண்மாயில் கரைத்து மழை வேண்டி பாடல்கள் பாடினர். முளைப்பாரி திருவிழாவில் பழையனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.