பழநி மலைக்கோயில் ரோப் கார்; பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 12:10
பழநி: பழநி மலைக்கோயில் சென்று வர பயன்படுத்தப்படும், ரோப் கார் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆக.18, முதல் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டன. அன்று முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. பராமரிப்பின் போது பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை புதிதாக மாற்றப்பட்டன. இயங்கும் பாகங்களில் கிரீஸ் வைக்கப்பட்டு முறையாக அனைத்து பாகங்களும் செயல்படுகிறது என சோதித்துப் பார்க்கப்பட்டு பொருத்தப்பட்டது. பராமரிப்பு பணியின் இறுதியாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைக்கப்பட்டு ரோப் கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. ரோப் கார் சேவையின் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்குப் பின் ரோப் கார் சேவை துவங்கப்படும். மூன்று நிமிடத்திற்குள் மலை கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது.