புதிய வாடகை சட்டம்.. அறநிலையத்துறை கோயில்களுக்கு பொருந்தாது; ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 12:10
மதுரை: ‛‛ ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்கு எதிராக பகவர்லால் என்பவர் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) மனு தாக்கல் செய்தார். இதன் பேரில் மதுரை ஆதீனத்திற்கு ஆர்டிஓ நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ‛‛ ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது. நிலம் ஆக்கிரமிப்பு, வாடகை வசூல் குறித்து அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். வாடகை நிலுவைத் தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம் எனக்கூறி ஆர்டிஓ அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.