பிறவியாகிய கடலில் இருந்து நீந்தி முக்தி என்னும் கரையை அடைவதற்கு திருமாலின் திருவடி என்னும் படகினை பற்றினால் போதும். எளிதாக பிறவியை கடக்கலாம் என்கிறார் நம்மாழ்வார்.
பெருமாளின் திருவடியை பற்றா விட்டாலும் அவரது அடியார்களான ஆழ்வார்களின் திருவடியை பற்றிக் கொள்வது எளிது. ஆம், அவர்கள் சிரமம் இல்லாமல் பெருமாளின் சன்னதியில் கொண்டு போய் நம்மை சேர்த்து விடுவார்கள். பன்னிரு ஆழ்வார்களின் திருவடியை பற்றிக் கொள்வோமா...