புரட்டாசி மாதத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி முதலான வைணவ தலங்களில் பிரம்மோத்ஸவம் பத்து நாட்கள் நடக்கும். இதில் தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் எழுந்தருள்வார். புரட்டாசி முழுவதும் பெருமாள் கோயிலை தரிசிப்பதும் அவரின் திருநாமங்களை சொல்வதும் மும்மடங்கு பலனைத் தரும்.