பங்களாதேஷில் பிறந்தவர் மகான் சைதன்ய பிரபு. பக்தி இயக்கத்திற்கு வலிமை சேர்த்தவர்களில் முன்னோடி இவர். ‘‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’’ என்னும் மகாமந்திரத்தை உருவாக்கியவர். குழந்தையாக இவர் இருக்கும் போது அழுதால், இவரது காதில் யாராவது கடவுள் நாமத்தை சொன்னால் அழுகையை நிறுத்தி விட்டு சிரிப்பார். உங்கள் வீட்டுக் குழந்தை அழுகிறதா... கடவுளின் பெயர்களான சிவ, ராம, கிருஷ்ணா, முருகா என்னும் நாமங்களை தாலாட்டோடு சொல்லுங்கள். அழுகை நிற்கும். ஆனந்தப்படும்.