திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு பஜ்ரங்கி சேவை சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 11:10
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கடை சனியை முன்னிட்டு சனிபகவான் பஜ்ரங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட திருநள்ளாறில் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரம மூர்த்தியாக பகவான் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறும். இதனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் பகவானை தரிசனம் மேற்கொள்ளுவது வழக்கம் இந்நிலையில் வரும் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 20ம் தேதி மாலை 5:20மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் புரட்டாசி கடை சனியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் பகவானுக்கு பல்வேறு திரவங்களால் கொண்ட அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சனிபகவானுக்கு வஜ்ரங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக நலன் குளத்தில் வேண்டுதலுக்கு இணையாக பகவனை வழிபட்டனர். பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.