திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்; ஜொலிக்கிறது கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2023 09:10
திருமலை திருப்பதியில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு முறையும் அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம்.உலகம் முழுவதிலும் இருந்து பெருமாள் பக்தர்கள் இந்த விழா நாட்களில் பெருமாள் தரிசனம் பெற திரள்வர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் அந்தவகையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இன்று முதல் திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகமாக நடைபெறுகிறது. விழாவில் இன்று இரவில் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி கோவில் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கிறது.
நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்
16/10/23 காலை சின்ன சேஷ வாகனம் இரவில் அன்ன வாகனம் 17/10/23 காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம் 18/10/23 காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம் 19/190/23 காலை மோகினி அவதாரம் இரவில் கருட வாகனம் 20/10/23 காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம் 21/10/22 காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம் 22/10/23 மாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம் 23/10/23 சக்ர ஸ்நானம்.