கோதண்டராமராக அனுமன் வாகனத்தில் வலம் வந்த திருப்பதி பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 12:10
திருப்பதி; கலியுகத்தின் கடவுளான திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமி நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் ஆறாம் நாளான இன்று அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வடிவில் பக்தர்களுக்கு மலையப்ப சுவாமி தரிசனம் அளித்தார்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.20) மலையப்பசுவாமி, கோதண்டராமர் வடிவில் அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு, பாசுரம் பாடி மாடவீதிகளில் ஆடிவந்தனர். விழாவில் திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறக்கட்டளை குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.