கன்னியாகுமரியில் இருந்து காளி மலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 01:10
நாகர்கோவில்; கன்னியாகுமரியில் இருந்து காளி மலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நேற்று காலை தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளி மலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நேற்று காலை தொடங்கியது . கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இரு முடி கட்டப்பட்டு புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ரத யாத்திரை தொடக்க விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காளிமலை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன், சுவாமி தோப்பு குரு சிவச்சந்திரன்,கிழக்கு மாவட்ட ஆர். எஸ் .எஸ். தலைவர் ராஜாராம் டாக்டர் செந்தில் வேலன்,மாவட்ட பா.ஜ.,தலைவர் தர்மராஜ் ,பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை ஆதீனம் இந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். வரும் 22ஆம் தேதி இந்த யாத்திரை பத்து காணியை சென்றடையும்.அங்கு பொங்கல் விழா நடைபெறுகிறது.