பதிவு செய்த நாள்
21
அக்
2023
10:10
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி விடுகிறான். அதற்கான வழிபாடே நவராத்திரி கொண்டாட்டங்கள். நவராத்திரி என்பது அம்பிகைக்கு உரிய பூஜை. அந்த வழிபாட்டில் கொலுவில் அம்பிகையின் உருவ பொம்மைகளோடு, பிற தெய்வங்களின் உருவங்களையும் வைத்து பூஜை செய்வதற்கு காரணம் உண்டு. ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி ஆகிய நாட்களில், அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை மட்டும் வழிபடுகிறோம். ஆனால், நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுள்களையும் வைத்து பூஜை செய்கிறோம். மஹிஷாசுரனை அழிக்க அனைத்து ஜீவராசிகளின் அம்சங்களிலிருந்து அம்பிகை உருவானாள் என்பதை வெளிபடுத்தும் விதமாக புல், பூண்டு, தாவரங்கள் ஊர்வன, பறப்பன, மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என, வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து, மத்தியில் நடுநாயகமாக அம்பிகையின் உருவத்தை வைத்து வழிபடுகிறோம். அதனால் தான் பிற விஷேச நாட்களில் பூஜிக்க இயலாதவர்கள் கூட, நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம், எல்லா கடவுள்களையும் வழிபட்ட பலனை அடைய முடியும் என்கின்றனர்.
பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து, சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்; மலர்கொண்டு திட்டாணி வகை கோலம் அன்னையாகும். காளராத்ரியாக பாவித்து வழிபட வேண்டியவள். காளராத்ரி என்றால் அடர்ந்த இருட்டு என, அர்த்தமாகும். இந்த நாளன்று தன் பக்தர்களுக்கு இவர் தைரியத்தை அளிப்பார். காளராத்ரி சிலைக்கு, நான்கு கைகள் உண்டு. இவளை, சாம்பவி என்றும் அழைப்பர். இத்தனை ஆயுதங்களை ஏந்தி வீராவேஷமாய் காட்சியளிக்கும் அம்பிகையை காணும்போது, நம் மனதில் தைரியமும் கிடைக்கும். இந்நன்னாளில் அம்பாளை வணங்குவது புத்தி தெளிவையும், சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும்.