பதிவு செய்த நாள்
21
அக்
2023
12:10
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழாவின், ஆறாம் நாளில், பின்னணி பாடகி மீனாள் ஜெயினின் இசைக்கச்சேரி நடந்தது.
கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த, 15ம் தேதி முதல் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவராத்திரி விழாவின், ஆறாம் நாளான நேற்று, மும்பையை சேர்ந்த பின்னணி பாடகி மீனாள் ஜெயினின், பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், லிங்க பைரவிதேவி மற்றும் பெண் தெய்வங்களை போற்றி பாடிய பாடல்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. ஈஷாவில், நவராத்திரி விழாவையொட்டி, இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, பாரம்பரிய ஆடைகள், அணிகலன்கள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடந்து வருகிறது. ஏழாம் நாளான இன்று மாலை, 6:30 மணிக்கு, சிவ நாராயணன் குழுவினரின் ராஜஸ்தானிய நாட்டுப்புற நடனம் நடக்கிறது.