பதிவு செய்த நாள்
21
அக்
2023
01:10
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,13 முதல் 18 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. நவ., 12 தீபாவளியன்று அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசம் சாத்துபடி செய்யப்படுகிறது.
இக்கோயிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்ஸவத்தில் தினமும் மாலை 6:00 மணிக்கு ஆடி வீதியில் அம்மன் சுற்றி மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு வருவார். பின் கொலு சாவடியில் எழுந்தருளுவார். நவ.,17 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். நவ.,18 மாலை 6:00 மணிக்கு அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் வலம் வருவர். நவ.,8 ஐப்பசி பூரத்தன்று காலை 10:00 மணிக்கு மூலஸ்தான அம்மனுக்கும், உற்ஸவ அம்பாளுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்கு, தீபாராதனை நடக்கும். நவ.,12 தீபாவளியன்று காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்யப்படும். நவ.,13 முதல் 18 வரை கோயிலில் கந்தசஷ்டி உற்ஸவம் நடக்கிறது. நவ.,19 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வெள்ளிக்கவசம், பாவாடை சாத்துப்படி, சண்முகார்ச்சனை நடக்கிறது.