நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு போட்ட வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 10:10
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக்.15ல் துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு மண்டகபடிதாரர்களால் நவராத்திரி கொழு உற்ஸவ வழிபாடு நடந்தது. பத்தாம் நாளான இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே நகர் வலம் சென்று திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி மைதானம் சென்றார். அங்கு பாரிவேட்டை, அம்பு வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், மகா காளியம்மன், பகவதியம்மன் கோயில்களிலும் 10 நாட்களாக நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது.