ஷீரடி சாய்பாபா ஸித்திதினம்; பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 11:10
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா ஸித்தி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் 105 வது ஆண்டு புண்ய ஆராதனை தினம் (ஸித்தி தினம்) முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமத்துடன் விழா துவங்கியது. ஸ்தவன மஞ்சரி பாராயணம், ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை, ஆரத்தி சாவடி ஊர்வலம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.