செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் அபிதகுஜாம்பாள் அம்மனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கரண்சி நோட்டுகளால் அலங்காரம் செய்தனர். செஞ்சி பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200, 100, 50, 20, 10 ரூபாய் கரண்சி நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு 8 மணிக்கு மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர்.