செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் விஜயதசமி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 04:10
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் விஜயதசமி நிறைவு விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டி துவங்கியது. 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பு ஹோமும், மாலை 6 மணிக்கு மகா அர்ச்சனையும், மகா தீப வழிபாடும் நடந்து வந்தது. நேற்று விஜய தசமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், விசேஷ ஹோமமும் நடந்தது. மாலை 5 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு கடந்த 10 நாட்களாக நடந்த சிறப்பு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு மகா அபிஷேகமும், மகா அலங்காரமும், விசேஷ தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் ராமகன்னியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வரன் குருக்கல் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.