தண்ணீர் வற்றிய கண்மாயிலிருந்து ராகு கேது நாகர் சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 04:10
திருமங்கலம்; திருமங்கலம் சிந்துபட்டி அருகே செம்பட்டி கண்மாயில் தற்போது தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் நாகர் சிலைகள் கிடைப்பதை பார்த்து போலீசார் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிந்துபட்டி போலீசார் மற்றும் வி.ஏ.ஓ., கவுசல்யா கண்மாய்க்கு சென்று அங்கிருந்த ராகு, கேது சிலைகளை மீட்டனர். சிலைகள் தற்போது வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிலை கண்மாய்க்குள் எப்படி வந்தது. மூழ்கி இருந்த சிலை சமீபத்தில் வெளிப்பட்டதா, அல்லது வேறு யாரேனும் எங்கிருந்தாவது கொண்டு வந்து போட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.