சந்திர கிரகணத்தில் திருநள்ளாறு கோயில் நடை அடைப்பு இல்லை; பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2023 12:10
காரைக்கால்: சந்திர கிரகணத்தில் அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருந்த நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடை அடைப்பு இல்லை. பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சந்திரகிரகணம் துவங்குவதற்கு முன் அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்படும். கிரகணம் முடிந்த பின், பரிகார பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருநள்ளாறு கோவிலில் தர்பாரண்யேஸ்வரர், தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது நம்பிக்கை. இந்நிலையில், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சந்திர கிரகண நேரத்திலும் நடை திறந்திருக்கும். வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.