மயிலாடுதுறை சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2023 10:11
மயிலாடுதுறை; சின்னகடைவீதியில் சித்திவிநாயகர் (கச்சேரி பிள்ளையார்) கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, இன்று (நவ.,1ம் தேதி) மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி 30ம்தேதி காலை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புனிதநீர் கலசம் யானைமீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் 4ம் கால பூஜை, பூர்ணாஹுதி செய்யப்பட்டு, கடம்புறப்பட்டு கோயிலை வலம்வந்தது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலெக்டர் மகாபாரதி, டாக்டர் ராஜசேகர், கோயில் தக்கார் ரவிச்சந்திரன், விஜயகுமார், சந்திரசேகர் மற்றும் சின்னகடைவீதி வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.