2000 கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்கு வைப்பு நிதி; காசோலை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2023 03:11
சென்னை: இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூஜை கூட நடத்த நிதி வசதி இல்லாத கோவில்களுக்காக, ஒரு கால பூஜை திட்டம், 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை கூட நடத்த நிதி வசதி இல்லாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு வைப்பு நிதி வைக்கப்பட்டு உள்ளது. அதன் வட்டித் தொகையில் இருந்து ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ. 2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ. 40 கோடிக்கான காசோலையினை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.