சென்னை; பக்தர்களுக்கு சேவை யாற்றுவதற்காக உருவாக் கப்பட்டது, பக்த பாத சேவா டிரஸ்ட். எந்தெந்த ஊரில் பகவான் எப்படி அவதாரம் எடுத்தார் என் பதை அந்தந்த ரூபங்களாக அலங்காரம் செய்து, ஊர் ஊராக பக்தர்கள் தரிசிக்க வழிவகை செய்கிறது. அந்த வகையில், முதல் முறையாக சென்னை, அடையாறு, காந்தி நகரில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில், தர்ம பரிபாலன சபாவில் ஜெகன்நாத சுவாமி தரிசன விழா, வரும் 3ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில், பஞ்ச துவாரகா துவாரகதீஷ் ஐந்து விதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தரவுள்ளார். விழா நடக்கும் மூன்று நாட்களிலும் காலை 7:00 மணி முதல் துவாரகாதீசன் தரிசனம், துளசி பூஜை, கீர்த்தனைகள், தாமோதர ஆர்த்தி, உபன்யாசங்கள் நடக்கின்றன.