கருமாரியம்மன் கோவிலில் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 02:11
கோவை; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவனை திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.