500 ஆண்டுகள் பழமையான விஜயநகர பேரரசு, நாயக்கர் கால நடு கற்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2023 05:11
காரியாபட்டி; காரியாபட்டி எஸ். தோப்பூரில் பழமையான சிலைகள் இருப்பதாக மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் ஜெயசூர்யா, தர்மராஜா தகவல்படி, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர், அய்யனார் கோவிலில் ஆய்வு செய்தனர். அதில், கையில் வில், அம்புடன் இருக்கும் வில்வீரன் சிற்பம் 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். கணவர் இழந்த துக்கம் தாங்காமல் உடன்கட்டை ஏறிய மனைவியுடன் உள்ள வீரர்களின் சிற்பங்கள் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதிவகை நடு கற்களாக இருக்கலாம். வாள், குத்தீட்டி போன்ற ஆயுதங்களுடன் இருக்கும் 2 வீரர்களின் புடைப்பு சிற்பம் 17ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். பெரிய கோவில்களில் மட்டுமே காணப்படும் பாவை விளக்கு கற்சிற்பம் இங்கு 3 உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது முற்காலத்தில் பெரிய கோவில் இருந்திருக்கலாம். அய்யனார், பூர்ணகலா, புஷ்கலா, நந்தி, குழந்தை சிற்பம் சிறப்பான வேலைப்பாடுடன் உள்ளது என்றனர்.