ராசிபுரம் ஸ்ரீ நித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா; கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2023 02:11
நாமக்கல்: ராசிபுரம் ஸ்ரீ நித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்கோயில் ஐப்பசி திருவிழா கடந்த அக்., 24ம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று அதிகாலை துவங்கியது. முதலில் கோயில் பூசாரி அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினர். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் பக்தி பரவசத்துடன், கொட்டும் மழையிலும் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினா். விழாவில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.