பதிவு செய்த நாள்
10
நவ
2023
11:11
தஞ்சாவூர்; திருவையாறில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் திருவையாறு அன்னை காவிரி பௌர்ணமி வழிப்பாட்டு குழு சார்பில் 13ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரதயாத்திரை கர்நாடக மாநிலம் குடகுமலையில், தலைக்காவிரி முதல் துவங்கி பூம்புகார் வரை செல்லும் ரத யாத்திரை நடந்து வருகிறது. இந்நிலையில் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் ரத யாத்திரை வந்தடைந்து. திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அருளாசியுடன் காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆரத்தி நடைபெற்றது. அகில பாரத சந்நியாசிகள் சங்கநிறுவனர் இராமாணந்த சுவாமிகள் தலைமை வகித்தார். அம்மன்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் தலைவர் சொருபானந்த மகராஜ் சுவாமி, கந்தர்வக்கோட்டை யோகி சிவபிரம்மாணந்தா சுவாமி, தமிழ்நாடு ரத ஒருங்கிணைப்பாளர் முருகானந்த சுவாமி, திருவையாறு சங்கர சித்தேஸ்வரானந்தபுரி சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தில்மணி, வெற்றிலை மண்டி சங்கர் , வார்டு உறுப்பினர்கள் நாகரெத்தினம் முருகானந்தம் சந்துரு , சாய்பாபா கோவில் அறங்காவலர் ராஜராஜன், வர்த்தக சங்க தலைவர் கல்யாணபுரம் திலகர், ஒய்வு பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜகலைச்செல்வன், நடுக்காவேரி ஆதி. உறுதிமொழி கோவிந்தராசன், எல்ஐசி சசிகுமார் , வடகயிலாயதிருக் கூட்டம் பழனிநாதன் மற்றும் செவ்வாய்கிழமை படித்துறை, புஷ்ப மண்டபத்தெரு, இராமப்ப அக்ரஹாரம் தெருவாசிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவேரி பெளர்ணமி வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சேதுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.