சென்னை, வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள் பொட்ரோல் குண்டு வீச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 11:11
சென்னை: சென்னை பாரி முனை கோவிந்த நாயக்கன் தெருவில் உள்ள ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் தேவஸ்தான கருவறைக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணன், கோயில் எதிரே உலர் பழங்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை எனக்கூறி இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை, சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் மூலம் பற்ற வைத்து, கோயில் கருவறைக்குள் வீசியது தெரியவந்துள்ளது. முரளி கிருஷ்ணன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சிறையில் இருந்து வெளியே வந்ததும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.