பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தீபாவளி சிறப்பு வழிபாடு செய்தனர்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து தங்க கவசம் சாற்றி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 7:00 மணி முதல் இரவு வரை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்கார சேவையில் அருள் பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து சுவாமியை தரிசித்தனர்.
*அதேபோல் பரமக்குடியில் உள்ள ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.