பெரியகுளம்: பெரியகுளம் பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திரா சோழீஸ்வரர், அறம் வளர்த்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. வரதராஜப் பெருமாள் கோயில், ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், ஷீரடி சாய்பாபா கோயில், வரசித்தி விநாயகர் கோயில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.