துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கி வழிபட்டு வருகின்றனர். கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் இரவு சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தகள் தரிசனம் செய்தனர்.