Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு காவிரியில் ஐப்பசி ... ஐயப்பன் சென்ற வழி;  70 வயதில் 71 முறை பெரிய பாதையில் பயணம் செய்த கிரிதர்சாமி! ஐயப்பன் சென்ற வழி; 70 வயதில் 71 முறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மா ஸ்தாபித்த காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பிரம்மா ஸ்தாபித்த காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி கடைமுக  தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

16 நவ
2023
03:11

மயிலாடுதுறை ; மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத கடைமுக  தீர்த்தவாரி பல்லாயிரகணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம் (மயிலாடுதுறை). அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரிரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் என்பது ஐதீகம்.  

இதனை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி 1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர்த்தவாரி) சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபேல் இவ்வாண்டு துலா மாத பிறப்பு தீர்த்தவாரி விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 13ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து இன்று கடைமுக தீர்த்தவாரி நடந்து. அதனையொட்டி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி,  அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குளம் காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர்  சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரியின் இருகரையிலும் எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கட்டளை சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் அஸ்திர தேவர்களுக்கு காவிரியின் இருகரையிலும்  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமி தீர்த்தம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினர். துலா உற்சவத்திற்கு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் துலா உற்சவத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு கடந்த 11ம் தேதி மாலை மயிலாடுதுறை பகுதிக்கு வந்தது. காவிரியில் தண்ணீர் சென்றதால் கடைமுக தீர்த்தவாரியான இன்று காலை முதலே திரளான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர். மதியம் சுவாமி தீர்த்தம்கொடுக்கும் போதும் பல்லாவரத்தில் மகிழ்ச்சியுடன் புனித நீராடினர். இதில் எம்பி ராமலிங்கம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனர். எஸ்பி மீனா தலைமையில் நூற்றுக்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் அஷ்டமி பூப்பிரதட்சணம் யொட்டி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை :  அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி, அஷ்டமி சப்பரங்களில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178 வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar