பதிவு செய்த நாள்
16
நவ
2023
04:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நல்லபடியாக முடிய வேண்டும் என்று காவல்துறை சார்பில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் இருக்கும் திருப்பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும், கார்த்திகை தீப திருவிழா வரும் 17ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி, 26ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக விழா ஏற்பாடுகள், அனைத்து துறைகள் சார்பில் நடந்து வருகிறது. மலை ஏறும் பக்தர்கள் மற்றும் மகா தீபம் ஏற்ற செல்வோர் பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி குறித்து, மலை அடியிலிருந்து மலை உச்சி வரை மலை ஏறும் பாதை முழுவதும், போலீசார் ஆய்வு செய்தனர். இதில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு அருகே உள்ள, அருணாசலேஸ்வரர் பாதத்திற்கு போலீசார் தேங்காய் உடைத்து கற்பூர தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.