சீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை; தங்களது கைகளாலேயே பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2023 04:11
சாணார்பட்டி, நத்தம் அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை, அன்னதானம், சப்பர பவனி நடந்தது.
இதையொட்டி இன்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து செந்தாமரம் வீசி பூஜை செய்தனர்.மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலிலிருந்து பக்தர்கள் இழுத்து செல்ல சப்பர பவானி நடந்தது. தொடர்ந்து காலை11:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை அன்னதானம் நடந்தது. திண்டுக்கல், நத்தம், செந்துறை, கோபால்பட்டி, உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.