திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2023 03:11
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோயிலில் கார்த்திகை முதல் சனிக்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கோயிலில் மிகவிமர்ச்சியாக நடைபெறம் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் (20ம் தேதி) புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம், சுவாமி தரிசனம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கார்த்திகை முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் அதிகாலை முதல் வருகைப்புரிந்தனர். அதிகாலை 4:30மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் திருப்பதி போல கட்டண தரிசனம், தர்ம தரிசனத்தில் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் அதிகாலை புனித நீராடி, கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பாதுகாப்பு கருதி சீனியர் எஸ்.பி. நிதின் கெஹால் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.