உடுமலை ; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா 98வது பிறந்தநாள் விழாவையொட்டி உடுமலை ஸ்ரீ சத்ய சாய் ஆன்மீக மையத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபா திருஉருவ படத்திற்கு பூக்களால் அலங்கரித்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, தபோவன பாராயணம் நடந்தது. இதில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.