அயோத்தி ராமர் கோவிலில் அர்ச்சகர் பணி; 20 இடத்திற்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2023 04:11
அயோத்தி; அயோத்தியில் ஜன., 22ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோவிலில் அர்ச்சகர் வேலை கேட்டு, 20 பணியிடத்துக்கு, 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. வரும் ஜனவரி 22ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் கட்டுமானப்பணிகள் டிச.,31க்குள் நிறைவு பெற்று விடும் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு, 20 பணியிடத்துக்கு இதுவரை 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இன்னும் அதிகமாக விண்ணப்பம் வர வாய்ப்புள்ளது. விண்ணப்பத்திலிருந்து தகுதியுள்ள 20 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.