தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைக்க கல்தூண் நிர்மாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 11:11
தூத்துக்குடி; தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான திருப்பணிகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நடந்து வருகிறது. இதில் 64 தூண்களுடன் கூடிய கல் மண்டபம், சீதேவி, பூதேவி ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் புதுப்பிக்கப்படுகிறது. இதில் பிரதான பணியான கல் மண்டபம் அமைப்பதற்கு 64 பிரம்மாண்ட கல் தூண்கள் நிர்மாணம் செய்யும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.