திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 11:11
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி பந்தக்கால் முகூர்த்தம் மிகவிமர்ச்சியாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இதனால் ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவிமர்ச்சியாக நடைபெறம் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிச.20ம் தேதி புதன்கிழாமை மாலை 5.20மணிக்கு மகரராசியிலிருந்து, கும்பராசிக்கு பிரவிசிக்கிறார். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் தொடங்கியது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுக்கு திருவிழாவுக்கு முறையாக அழைப்பு இல்லை என்று கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பந்தகால் முகூர்த்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தருமபுரம் ஆதினம் சார்பில் திருநள்ளாறு கோவில் சனிப்பெயர்ச்சி திருவிழாவில் தன்னை கலந்தாலோசிக்க கோரி தருமபுரம் ஆதினம் சார்பில் வழக்கு தொடக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி அரசு அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று காலை சனிப்பெயர்ச்சி திருவிழா முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் முறைப்படி தருமபுர ஆதீனத்திற்கு அழைப்பு விடப்பட்டது. பின்னர் காலை 10.30மணிக்கு சனிப்பெயர்ச்சி பந்தக்கால் முகூர்ந்தம் மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. முன்னாதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பந்தகாலுக்கு பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யபட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.