பதிவு செய்த நாள்
24
நவ
2023
12:11
மத்திய பிரதேசம்: காஞ்சி சங்கரமடத்தின் 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ‛விஜய யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நடைபெற உள்ளது. இன்று 24ம் தேதி ஜபல்பூர், கீதா தாம் மந்திரில் பிருந்தாவன துவாதசி, துளசி விவாஹம், பிரதோஷ பூஜையில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 26 நவம்பர் முதல் -28ம் தேதி மத்திய பிரதேசம், ஜபல்பூர் கீதா தாம் மந்திர், குவாரிகாடில் 26ம் தேதி, கார்த்திகை தீபம், பௌர்ணமி பூஜை 27ம் தேதி- திங்கள்- கிருத்திகை சோமவார பூஜை சிறப்பு பூஜைகளில் பங்கேற்கிறார். 29 நவ முதல் 9 டிச வரை மகாராஷ்டிரா, நாக்பூர், பகவத்பாதா சபா, ராம்நகர் கிருத்திகை சோமவார பூஜையிலும் பங்கேற்கிறார். இதை, காஞ்சி சங்கரமட நிர்வாகம் அறிவித்துள்ளது.