பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கார்த்திகை பாலதீபம் ஏற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2023 04:11
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ராஜேந்திர சோழீஸ்வரர் சன்னதி முன்பாக நந்தீஸ்வரருக்கு நடுவே கார்த்திகை பாலதீபம் ஏற்றப்பட்டது. உற்சவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். நடை அடைக்கப்பவில்லை: வழக்கமாக காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இன்று கார்த்திகை முக்கிய திருநாளை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்ட நடை, மதியமும் திறக்கப்பட்டிருந்தது. மாலையில் கார்த்திகை மஹா தீபத்தை தொடர்ந்து இரவு 9:00 மணி சொக்கப்பனை ஏற்றும் வரை நடை திறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருபணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பர சூரியவேலு, செயல் அலுவலர் ஹரிஸ்குமார், அர்ச்சகர்கள் தினேஷ் சிவம், கார்த்திக் செய்திருந்தனர்.