செஞ்சி; செஞ்சி காசி விஸ்வநாதருக்கு திருப்பணி துவங்குவதற்காக முறுக்கு அபிஷேகம் செய்தனர்.
செஞ்சி சிறுகடம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நுாறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ளது. எனவே திருப்பணி துவங்க வேண்டி கடந்த 21ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை 21 நாட்களுக்கு 77 கிலோ எடையில் பல்வேறு அபிஷேகம் செய்து வருகின்றனர். முதல் நாள் 77 கிலோ விபூதி அபிஷேகமும், 2ம் நாள் 77 கிலோ பூக்களால் அபிஷேகமும் நடந்தது. நேற்று 8 வது நாளாக 77 கிலோ முறுக்கு அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பகல் 11 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த 77 கிலோ முறுக்கில் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு மகா தீபாரதனை செய்து முறுக்கு பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். இன்று அதிரசத்தால் அபிஷேகமும், நாளை 77 கிலோ வேர்கடை, நாட்டு சக்கரை அபிஷேகமும் செய்ய உள்ளனர்.