பழநி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2023 10:11
பழநி: பழநி முருகன் கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை (நவ.29) இன்று பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படி பாதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (நவ.29) ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.