பதிவு செய்த நாள்
01
டிச
2023
04:12
கர்நாடகாவின் கடலோர பகுதிகள், சுற்றுலாவுக்கு எந்த அளவிற்கு புகழ் பெற்றதோ, அதே அளவிற்கு கோவில்களுக்கும் புகழ் பெற்றது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில், சயன நிலையில் பத்மநாபர் சிலை இருக்கும். அதுபோல உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலிலும் ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட சயன நிலையில் விஷ்ணு சிலை உள்ளது.
ஸ்ரீ அனந்தசயன கோவில்; உடுப்பியின் கார் கலா டவுனில் உள்ளது ஸ்ரீ அனந்த பத்மநாபா கோவில். இக்கோவிலில் உள்ள விஷ்ணு சிலை, ஒற்றை கருங்கல்லில் சாய்ந்த நிலையில் செதுக்கப்பட்டு உள்ளது. இதனால் இக்கோவிலை பக்தர்கள் ஸ்ரீ அனந்த சயன கோவில் என்று அழைக்கின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும்.
5 நாட்கள் திருவிழா; இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா ஐந்து நாட்கள் நடக் கிறது. ரதசப்தமியும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்கால கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. பெங்களூரில் இருந்து கார்கலா, 360 கிலோ மீட்டர் தூரத்தில் உள் ளது. உடுப்பியில் இருந்து, 37 கிலோ மீட் டர் துாரத்திலும், மங் களூரில் இருந்து, 50 கிலோ மீட்டர் துாரத்தி லும் உள்ளது.
கோமதேஸ்வர் கோவில்; பெங்களூரில் இருந்து மங்களூரு, கார்வார், முருடேஸ்வருக்கு இயக்கப்படும் ரயில்களில் உடுப்பி, குந்தாபுரா ரயில் நிலை யங்களில் இறங்கி அங்கிருந்து, வாடகை கார்கள் மூலம் செல் லலாம். பெங்களூரில் இருந்து கார்கலாவுக்கு அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த கோவிலை சுற்றி, 10 கிலோ மீட் டர் துாரத்திற்குள் சதுர்முகபசதி, கோமதேஸ்வர் கோவில், வெங்கட ரமண ஆலயம் உள்ளது.