திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா; சொர்க்கவாசல் தரிசனத்திற்கு 4.23 லட்சம் பக்தர்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2023 05:12
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு எந்த நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிட்டு 4.23 லட்சம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் இருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி, டோக்கன் இல்லாதவர்கள், திருமலை வரலாம் ஆனால் தரிசன அனுமதியில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.