அரவிந்தர் மகா சமாதி தினம்; அவரது அறையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2023 04:12
புதுச்சேரி; மகான் அரவிந்தர் மகா சமாதி தினத்தையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணா தனகோஷ்- ஸ்வர்ணலதா தம்பதிகளின் மகனாக 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி கொல்கத்தா நகரில் மகான் அரவிந்தர் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரிக்கு வந்த அவர் ஆசிரமத்தில் ஆன்மீக வாழ்வியலில் ஈடுபட்டார். 1950 டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மகா சமாதி தினமாக புதுச்சேரி ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை யொட்டி 73 ஆம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதால், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிர்வாசிகளின் கூட்டு தியானமும் மற்றும் அதனை தொடர்ந்து அரவிந்தர் வாழ்ந்த அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.