ஸ்ரீ ராமர் உருவாக்கிய வில்லுண்டி தீர்த்தம் தடுப்பு சுவர் சேதம் : பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2023 04:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடலில் ஸ்ரீ ராமபிரான் உருவாக்கிய வில்லுண்டி தீர்த்தம் பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்தது. இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ராமாயண வரலாற்றில், ராமர் இலங்கையில் ராவனணை வதம் செய்து சீதையை மீட்டு கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தார். அப்போது சீதை மற்றும் வானர சேனைகளுக்கு தாகம் எடுத்ததால், ராமர் கடலில் வில்லை ஊன்றியதும் நல்ல தண்ணீர் பீய்ச்சி எழுந்தது. இதனால் இதற்கு வில்லு!ண்டி தீர்த்தம் எனவும், இத்தீர்த்தம் அமைந்துள்ள இப்பகுதிக்கு தண்ணீர்ஊற்று கிராமம் என அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் ராமேஸ்வரத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி தண்ணீர்ஊற்று மீனவ கிராம கடற்கரையில் இருந்து 200 அடி து!ரத்தில் கடலில் உள்ளது. இங்கு மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் கடலில் பாலம் அமைத்து உள்ளதால், தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் பாலத்தில் நடந்து சென்று புனித நீரை வாளியில் அள்ளி பருகினர்.
சேதம் : இந்நிலையில் 5 நாள்களுக்கு முன்பு இப்பாலம் ஒருபகுதியில் 8 அடியில் தடுப்பு சுவர் உடைந்து கடலில் விழுந்தது. இச்சூழலில் பக்தர்கள் புனித நீரை பருகச் சென்றால் கடலில் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், உள்ளூர் மக்கள் தீர்த்த கிணற்றை சுற்றி தடுப்பு வேலி தடை ஏற்படுத்தினர். இதனால் தீர்த்தத்தை பருக முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சேதமடைந்த தடுப்பு சுவர்சுவரை சரி செய்ய மக்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.