பந்தலூர்: பந்தலூரில் பிரம்மகுமாரிகள் சார்பில் உலக அமைதிக்காக திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பிரம்மகுமாரிகள் சார்பில் பந்தலூர் முருகன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜைக்கு நிர்வாகி பாஸ்கரன் தலைமை வகித்தார். கோவில் குருக்கள் சிவலிங்கம், கோவில் கமிட்டி நிர்வாகிகள் சண்முகம், பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். பூஜைகளை பொறுப்பாளர் ரேணுகா நடத்தினார்."உலகம் அமைதி பெற வேண்டும், நாட்டில் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும், எனும் நோக்கத்தில் நடத்தப்பட்ட பூஜையில், உலக அமைதிக்கு நான் எனும் தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தீப தியானமும் நடந்தது. பொறுப்பாளர் ஜெயகுமார், வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் சுற் றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ராமலிங்கம் நன்றி கூறினார்.