திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பச்சை மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2023 08:12
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவார விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும். திருநள்ளார் கோவிலில் ஒவ்வொரு திங்கள் கிழமை 108சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது. பின்னர் 108பிரதான சங்குகளை மங்களவாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் பிரகார வளம் வந்து ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் மற்றும் பச்சை மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.வரும் 11ம் தேதி சோமவார நிறைவையொட்டி 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.