106வது ஜகத்குரு ஸ்ரீ ஜெயந்தி விழா துவக்கம்; பகவத் கீதையில் கிருஷ்ணர் காட்டிய வழி குறித்த சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2023 08:12
மயிலாப்பூர் : ஜகத்குரு ஜெயந்தி விழாவையொட்டி, ராம நாமம் மற்றும் பகவத் கீதையில் கிருஷ்ணர் காட்டிய வழி குறித்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், சிருங்கேரி மடம் சாலையில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி மடத்தில், ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன் சார்பில், 106வது ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகளின் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீசட்டடநாத பாகவதர் குழுவினர், ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், ஜகத்குரு ஜெயந்திவிழாவை ஒட்டியும் ராம நாமம் குறித்து சொற்பொழிவாற்றினர். அதைத் தொடர்ந்து, சுவாமி சிவயோகனந்தாவின், பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிய வழி குறித்த சொற்பொழிவு நடந்தது. ஜெயந்தி விழா, 11ம் தேதி வரை நடைபெறுகிறது.